குழப்பத்தில் மைத்திரி -தொகுதி அமைப்பாளர்களுக்கு அவரச அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எம்.பிக்கள் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துவரும் நிலையில் – சு.கவின் அனைத்து தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கொழும்புக்கு அழைத்துள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அமைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன்போது பொதுத்தேர்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் சு.கவின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

சு.கவின் 341 தொகுதி அமைப்பாளர்களுக்கும் கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கட்டாயம் பங்கேற்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

சு.கவின் முக்கிய புள்ளிகள் அக்கட்சியை கைவிட்டு, மஹிந்த பக்கம் தாவியுள்ளதால், தொகுதி அமைப்பாளர்களும் தாவலுக்கு தயாராகிவருகின்றனர். இந்நிலையிலேயே அவரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments