சாக் நாடுகளிடம் ஆதரவு கோரும் மகிந்த அணி


சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரத் அமுனுகம நேற்று, சார்க் நாடுகளின், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்களை எடுத்துக் கூறியுள்ள சரத் அமுனுகம, புதிய அரசாங்கத்துக்கு சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இருதரப்பு மற்றும் பரஸ்பர உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக நேற்றுப் பதவியேற்ற ரவிநாத் ஆரியசிங்கவும், இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

No comments