வித்தியின் புதிய கனவு: வடக்கு ஆளுநர்?


மாறி மாறி வரும் ஆட்சிகளில் கதிகை கனவு காண்பவர்களில் முதன்மையானவர் வித்தியாதரன்,வடமாகாண முதலமைச்சர் கதிரை முதல் யாழ்.மாநகர முதல்வர் கதிரை வரை அவர் கண்டுகொண்ட கனவுகள் நீளமானது.ஆனால் துரதிஸ்டமாக கனவுகள் ஏதும் மெய்த்துப்போவதில்லை.

இந்நிலையில் தற்போது வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக் என்.வித்தியாதரனைத் தெரிவுசெய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார் என்று தகவல்கள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகத் தெரிவு செய்வதற்கு திருகுமார் நடேசன் அழுத்தம் கொடுத்துள்ளார் எனவும், இதனால் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்த அடுத்த கணம் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தெரிவுசெய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கி இருக்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றவுடன் மறுநாள் சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனது விஜேராம இல்லத்துக்கு வித்தியாதரனை அழைத்திருந்த மஹிந்த, அவருடன் வடக்கின் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தார் என சொல்லப்படுகின்றது.

மஹிந்தவின் கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வைத்து பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்த வித்தி பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை வித்தியின் நெருங்கிய நண்பரான சுடரொளி ஆசிரியர் சிவராசா தற்போது  மஹிந்த தரப்பின் நெருங்கிய சகாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments