மைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபி தலைவர்களுடன் நேற்று பிற்பகல் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை வரும் 14ஆம் நாள் கூட்டுவதற்கு ஜனாதிபதி முடிவெடுத்த நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இறுதி சமரச முயற்சியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

No comments