ரணில் இந்தியாவுக்கும் எமக்கும் பிளவை உருவாக்க முயன்றார் - மைத்திரி


தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று, மைத்திரி- மகிந்த அணிகள் இணைந்து நடத்திய ‘ஜன மகிமய’ என்ற பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் இந்தியா தொடர்பாகப் பேசப்பட்டதாக, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களை கசிய விட்டனர்.

அதன் விளைவாக, என்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால் இந்தியாவின் ‘றோ’ இருப்பதாக, சிறிலங்கா அதிபர் கூறினார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நான் அதனை மறுத்து, இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த செய்திகள் பொய்யானவை என்று உறுதியளித்தேன்.

மகிந்த ராஜபக்சவின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன்  மிகவும் நெருக்கமாக பணியாற்றும், நல்ல உறவுகளைப் பேணும்.

No comments