சாட்டி துயிலுமில்ல மாவீரர் நாளுக்கும் தடை கோரி மனு

யாழ்.வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் தடையுத்தரவு வழங்கி உள்ளார். 
சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க வேண்டும் என கோரி ஊர்காவற்துறை பொலிசார் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். 
குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போது, விடுதலை புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பன காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது. அதேவேளை இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடை இல்லை. நீதிவான் தனது கட்டளையில் குறிப்பிட்டு உள்ளார். 

No comments