அம்பலமானது குதிரைப் பேரம்!


கொழும்பு அரசியலில் கட்சிதாவலும், அதற்கான குதிரைப்பேரமும் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரை வளைத்துபோடுவதற்காக மஹிந்த – மைத்திரி கூட்டணியால் முன்வைக்கப்பட்ட ‘டீல்’ அம்பலமாகியுள்ளது.


ஐ.தே.க. உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுடன், எஸ்.பி. திஸாநாயக்க நடத்திய தொலைபேசி உரையாடல், சமூகவளைத்தலங்களில் தற்போது வைரவாகியுள்ளது.

“நீங்கள் எமது பக்கம் வரவிருப்பதாக ஜனாதிபதி கூறினார். தற்போதே வந்துவிடுங்கள். அவ்வாறு வந்தால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை பெறலாம். முன்வைத்த காலை பின்வைக்கவேண்டாம். இது விடயத்தில் தாமதித்தால் பதவிகிடைக்காமல்போய்விடும்.

முன்னர்போல் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கமுடியாது. 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றே தீர்மானமொன்றை எடுங்கள்” என்று எஸ்.பி.திஸாநாயக்க, ரங்கே பண்டாரவிடம் பேரம் பேசியுள்ளார்.

இது குறித்து சபாநாயகரிடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் பாலித ரங்கே பண்டார முறையிட்டுள்ளார். இந்நிலையிலேயே குரல் பதவி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

No comments