ஒதுங்குகிறார் ரணில் - தலைவராகிறார் சஜித்


நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.


ரணில் வெற்றிவாகைசூடும் பட்சத்தில் பிரதமராக அவர் பதவிவகிப்பார். எனினும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியை அவர் துறக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஐ.தே.கவின் புதிய தலைவராக சஜித் பிரேமதாச பொறுப்பேற்றார் என்றும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரே வேட்பாளராகக் களமிறங்குவார் என்றும் அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாகவேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ரணில் கூட்டணியும், மைத்திரி கூட்டணியும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றன. ரணிலுக்கு எதிராக மைத்திரியே நேரடியாக களமிறங்கியிருப்பதால் அரசியல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையிலேயே ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள உறுப்பினர்கள், கட்சி தலைமைப் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல்.

ஐ.தே.கவின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்கு அதன் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நெடுநாளாகவே தவமிருந்துவருகிறார். அந்த ஆசை விரைவில் கைகூடவுள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments