இன்றும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு !


புதிய அரசாங்கத்தில், மற்றுமொரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) மாலை பதவிப்பிரமாணம் செய்து​கொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர்கள் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டதன் பின்னர் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், அமைச்சரவையில் ஒரு பகுதியினர் கடந்த 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். அதில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 12 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக கடந்த வியாழக்கிழமை (29) மேலும் ஒருதொகுதியினர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர்கள் ஐவரும், பிரதியமைச்சர்கள் அறுவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மூன்றாவது தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர்களின் விவரம்:

அமைச்சர்கள்

வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
தினேஷ் குணவர்தன - பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்

ஆர்.டி.அசோக பிரியந்த - (ஐ.தே.க)
கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்

No comments