மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை


நாடாளுமன்றத் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகிவருவதாக தெரியவந்துள்ளது.

பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விகிதாசார முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு, ஏற்ற வகையில் சட்டவரைவு ஒன்றைத் தயாரிக்க, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான இந்த தேர்தலில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments