விரைவில் மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு


மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை விரைவுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைப்படி முடியாவிட்டால் பழைய முறைப்படியாவது நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக அவர் கூறினார்.

எதிர்வரும் 14ம் திகதி சட்டரீதியாக கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் புதிய கொள்கைப் பிரகடணம் வாசிக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் பாராளுமன்றம் ஒரு நாளைக்கு பிற்போடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தேவையில்லை என்றும், அன்றைய தினம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

No comments