வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து!

பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமனற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல்.
வியாழேந்திரன் மீது ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தது, எனவே அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து. அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் அவர் கூறினார்.

No comments