காவல் நிலையங்களில் நிற்கும் கூட்டமைப்பு!



ரணில் அரசிடமிருந்து இரண்டு கோடி பணம் பெற்றதை அம்பலப்படுத்தியமைக்கான பழிவாங்கலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.அவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவான் தனது பெயரையும் தனது கட்சி பத்திரிகையான உதயன்; நிறுவனத்தையும் அவதூறான வகையில் நிதியை பெற்று பக்கச் சார்பாக நடப்பதாக தெரிவித்ததோடு பணத்திற்காக கட்சி மாறுவதாக கூறப்பட்டமை தொடர்பில் நீதி விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி கோப்பாய் காவல் நிலையத்தில் ஓர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளாராம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய நாம் பணத்மிற்கு விலைபோனதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் அவதூறு பரப்பியுள்ளார் என ஒலிநாடா மற்றும் அச்செய்தியினை வெளியிட்ட நிறுவனங்களின் ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வு காவல்துறையினரிடம் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.

30 கோடி ரூபா பணத்திற்கும் அமைச்சுப் பதவிக்காகவும் மகிந்தவுடன் இணையவுள்ளதாக எனது பெயரை குறிப்பிட்டு ஒலி வழங்கியுள்ளார். அந்த ஒலியை ஓர் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதனால் குறித்த தகவலினால் எனக்கு வேண்டுமென்றே அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எனது சுய கௌரவத்தை பாதிக்கும் செயலாக நான் கருதுகின்றேன். எனவே குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்றுத்தருமாறு கோருகின்றேனென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாளிய அபேயசேகரவிற்கு இ.சாள்ஸ் நிர்மலநாதன் எழுத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேபோன்றே சரவணபவனும் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஏற்கனவே செல்வம் அடைக்கலநாதன் சிவசக்தி ஆனந்தனிற்கு எதிரான மானநஸ்ட வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரணிலிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி பெற்றமையினை சிவசக்தி ஆனந்தன் அம்பலமாக்கியிருந்தார்.

இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவரிடம் நகைச்சுவையாக தெரிவித்த கருத்தினை முன்னிலைப்படுத்தி பழிவாங்கும் களத்தில் கூட்டமைப்பு குதித்துள்ளது. 

No comments