நாடாளுமன்றில் மகிந்த உரை


பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட போதும், அதனை ஏற்றுக் கொள்ள மகிந்த – மைத்திரி தரப்பு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்துவார் என்று  அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.

”புதிதாக பதவியேற்ற பிரதமர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றுவது வழக்கம். ஆனால், நேற்று அவருக்கு உரையாற்றவதற்கு சபாநாயகரினால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இன்று அவர் சிறப்பு உரை நிகழ்த்துவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments