மைத்திரி கொலைச்சதியில் கைதான இந்தியர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரை படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட தோமஸ் என்ற இந்தியர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இந்தியரை, அங்கொட தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் மூத்த மருத்துவ நிபுணர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையிலேயே, குறித்த இந்தியர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

No comments