எந்தக் கட்சிக்கும் முட்டுக் கொடுக்கப்போவதில்லை - சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசாங்கத்திலும் இடம்பெறாது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்பதால்,  தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தது.

ஆனால், எந்தவொரு கூட்டணியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேராது. அது தமிழ்க் கட்சிகளுடன் தனிக்கான கூட்டணியை வைத்திருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையிலான கூட்டணியில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளுமா என்று ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments