மஹிந்தவுடன் முல்லைதீவுக்கு புத்தரும் வந்தார்?முல்லைதீவு மாவட்டத்தின் செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் நேற்று மாலை அவசர அவசரமாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக மகிந்த ஐனாதிபதியாக இருந்த காலத்தில் 2013 ஆண்டு குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்துக்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் அங்கு விகாரையொன்றை நிறுவ முழு அளவில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் வந்திருந்து.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவசர அவசரமாக இராணுவ பாதுகாப்புடன் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதிலும் மஹிந்த பிரதமராகியுள்ள நிலையில் நீதிமன்ற தடை எதனையும் பொருட்படுத்தாது தற்போது புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியல் மாற்றத்தின் பின்னராக வடகிழக்கில் அரங்கேறப்போகும் பௌத்தமயமாக்கலை இந்நடவடிக்கை கட்டியங்கூறி நிற்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments