அகப்பட்டது தரமற்ற குடிநீர் போத்தல்?


வடக்கில் அதிலும் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் சந்தையினை திறந்துள்ள போத்தலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரில் தரமற்ற போலிகள் உலாவுவது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் சுமார் ஜயாயிரம் லீற்றர் குடிநீர் போத்தல்கள் சுகாதார பிரிவினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.இவையனைத்தும் மாநகர சபை ரக்டர் வண்டியில் நீதிமன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


அரசின் அங்கீகாரமற்ற பெருமளவிலான போலி குடிநீர் போத்தல்கள் வவுனியாவிற்கு அப்பால் சிங்கள பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வடபுலத்தில் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே பலதடவைகள் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments