கலைப்பதற்கு ஆலோசனை தேவையில்லை:மஹிந்த?


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த தேஷப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே தான் அது தொடர்பில் அறிந்திருந்ததாக தெரிவித்த மஹிந்த தேஷப்பிரிய
ஆனால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதாவது அரசியல் யாப்பில் பொது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேஷப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் பிரச்சினை இல்லை எனவும் ஆனால் தேர்தலுக்கான சூழல் தற்போது காணப்படுவதாகவும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எந்த நேரத்திலும் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராக உள்ளதாக தெரிவித்த மஹிந்த தேஷப்பிரிய நிலையில்லாத உலகத்தில் எதனையும் நிலையானது என கூறுவது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments