திருமலையில் கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை

திருகோணமலை – குச்சவௌி பகுதியில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இறக்கக்கண்டி, நான்காம் வட்டாரம் பகுதியில் தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கோடரித் தாக்குதலில் காயமடைந்த கணவரும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, 55 வயதான கணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண், திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குடும்பத் தகராறு காரணமாக, குறித்த வீட்டில் தங்கியிருந்த 65 வயதான ஒருவரே தம்பதியினரை கோடரியினால் தாக்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குச்சவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments