முப்படைகளின் பிரதானியை 27 ஆம் திகதி கைது செய்ய நடவடிக்கை

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

2008, 2009 காலப்பகுதியில் தலைநகர் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் பணி நிமித்தம் வௌிநாடு சென்றிருந்ததால் அவர் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.

எவ்வாறாயினும் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் இரண்டு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments