பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கம்

இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் லண்டனில்  சட்டன் பகுதியில் நினைவு கூறப்பட்டது.

நிகழ்வினை பொதுச்சுடர் ஏற்றி திருமதி சர்மிளா ஜெகன்மோகன் ஆரம்பித்து வைத்தார்.

தமிழீழ தேசிய கொடியினை தமிழீழ விடுதலை போராட்டத்தில் தலைவரோடு இணைந்து கொண்ட முதலாவது போராளி கலாபதி ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை லெப்டினன் கேணல் ரட்ணத்தின் சகோதரி சுகந்தினி ஏற்றி வைத்தார்.

தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது.

தொடர்ந்து திருஉருவத்திற்க்கான மலர்மாலையை திருமதி சுபா அணிவித்தார். தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள்.

நிகழ்வில் எழுச்சி கானங்கள் , எழுச்சி நடனங்கள் , நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2018 ல் எக்ஸ்ல் மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் விடயங்கள் மக்களுடன் பகிரப்பட்டு துண்டு பிரசுரங்களும் கையளிக்க பட்டது . இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.













No comments