பிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு!

காலை 9.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து பரதநடனம், தண்ணுமை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும், பிற்பகல் 13.30 மணிக்கு வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு இடம்பெற்றது.
இம்முறை பரதநடனம் 231 மாணவர்களும் தண்ணுமை 15 மாணவர்களும் வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவுகளில் 90 மாணவர்களுமாக மொத்தம் 336 மாணவர்கள் தரம் 2 முதல் தரம் 7 வரை தமிழ்கலைத் தேர்வுக்கு தோற்றியுள்ளனர் எனவும் தரம் 1 மாணவர்களுக்கான (மொத்தம் 175 பேர்) தமிழ் கலைச் செயன்முறைத் தேர்வு அடுத்துவரவுள்ள பிரெஞ்சு பள்ளி விடுமுறை காலத்தில் நடைபெறவுள்ளது எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment