இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்!


ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆத்மார்ந்த பங்காற்றிய எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகி விட்டார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் அவர் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிருந்தார்.

முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல போராட்ட வாழ்வியலை மையப்படுத்தி நூல்களை எழுதியுமிருந்தார்.

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர். நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர். கடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு உறவாடியும் பணியாற்றியும் வந்திருந்ததை  எழுத்தாளர் கருணாகரன் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவராலும்,கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளராக இருந்த புதுவை இரத்தினதுரையாலும் பாராட்டுக்கள் பெற்றவரும் இறுதி வரை தனது நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்தவராகவும் அவர் இருந்திருந்தார். 

No comments