கிளிநொச்சிக்கு படையெடுக்கின்றார் புத்தர்?


யாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் சிறிலங்கா அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது ஆதரவிலும் சிங்கள இனத்தவரான சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளார்.

பௌத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விதமாக ஒரு பவுத்த பிக்குவை பல்கலைக்கழகத்திலேயே தங்கியிருந்து இவ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அனுமதித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய சிறிலங்கா இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னர் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவர்களின் வழிபாட்டுக்கென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த புத்தர் சிலையானது பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாயப் பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.

இந்நிலையில் சென்ற ஆண்டு புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை தமக்கான முறையான ஆலயம் கிடைக்கப்பெறும் வரை தற்காலிகமாக வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

No comments