கடந்து போகின்றது பல்கலை மாணவர்களின் படுகொலை நீதி!


கடந்த 2016 ம் ஆண்டின் இதேநாளன்று கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து இலங்கை காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்சன் மற்றும் கஜனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் .அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வொன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மண்டபத்தில் , மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களின் கொலையினை வீதி விபத்தென இலங்கை காவல்துறை பிரச்சாரப்படுத்தியது.ஆனால் பிரேத பரிசோதனையின் போது முன்னாலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் மரணம் நிகழ்ந்ததென்பது ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

கோலையில் தொடர்புடைய அனைத்து காவல்துறையினை சேர்ந்தவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இதேவேளை மாணவர்கள் படுகொலை வழக்கினை தான் கையாளுவதாக பொறுப்பேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் நீண்ட நாட்களாக நீதிமன்றினை எட்டிப்பார்த்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதியோ உயிரிழந்தவர்களிற்கு நட்டஈடு குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பென உறுதி மொழிகள் வழங்கிய போதும் அவற்றில் ஏதுமே நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஆண்டு நினைவு நாளும் இன்று கடந்து போயுள்ளது.

No comments