வன்மத்தைக் காறி உழிந்த எதிர்க்கட்சித்தலைவர் ஈபிடிபி தவராசாவடக்கு மாகாணசபையின் இன்றைய இறுதி அமர்வு குழப்பங்களின்றி பரஸ்பர புரிதல்கள் மிக்க உரைகளுடன் நிறைவுபெறும் எனும் வாக்குறுதியுடன் இன்று சபை கூடியபோதும் வடக்குமாகாணசபையின் எதிர்கட்சித்தலைவரான ஈபிடிபி உறுப்பினர் தவராசா முதலமைச்சர் மீது வன்மத்தை கொட்டித் தீர்த்த சம்பவம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

முதலமைச்சரை அவரது பிறந்த நாளில் அவமானப்படுத்தவேண்டும் என்ற சிந்தனையுன் திட்டமிட்டு நடந்துகொண்டதுபோல உரையாற்றிய தவராச மிக ஆவேசமாக இவர் பிரேமானந்தரின் சீடன் குற்றவாளியான பிரேமானந்தரை விடுவிக்குமாறு இந்தியாவிற்கு கடிதம் எழுதியவர் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார் எனும் கோணத்தில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடர்ச்சியாக அவதூறூறாக உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இடையே முதலைமச்சர் எழுந்து தன்மீதா அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முற்பட்டபோது உறுப்பினர்களாக சயந்தன் மற்றும் அஸ்மின் உள்ளிட்டோர் முதலமைச்சரை பதிலளிக்கவிடாது கூச்சல் விளைவித்து உட்காரவைத்துவிட்டனர்.

இந்நிலையில் மதிய உணவிற்காக அமர்வு ஒத்திவைக்கப்பட்டபோது எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன் வந்த பல உறுப்பினர்கள் இவ்வாறான உரையை இறுதி அமர்வான இன்று தவிர்த்திருக்கலாம் என தவராசாவிடம் கடிந்துகொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

No comments