கோண்டாவில் வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

யாழ்.  கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோண்டாவில் உப்புமட சந்தியில் உள்ள உணவகம் மற்றும் அதன் முன்பாக நின்ற முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் விசாரணைகளை முன்னேடுத்து வந்தனர்.

அந்நிலையில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவிலக்கத்தை அடையாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிசாரிடம் நேற்று இரவு ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

No comments