காணி விடுவிக்க இராணுவம் மறுப்பு: திரும்பினார் ஆளுநர்!


இராணுவத்தினர் வசமுள்ள காணிகளினை டிசெம்பர் 31 இனுள் கையளிக்க ஜனாதிபதி பணித்துள்ளதாக சுமந்திரன் முதல் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பிரச்சாரம் செய்ய இராணுவமோ ஒரு அங்குலத்தினை தானும் விடமுடியாதென அறிவித்துள்ளது.

கடந்த 3ம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதியால் வடக்குமாகாணத்தில் நிலவும் பொதுமக்களின் காணிப்பிரச்சனைகளான இராணுவத்தின் வசமுள்ள காணிகள் , வனவளத்திணைக்களம் கையகப்படுத்தி உள்ள காணிகள்,தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் , வனஜீவராசிகள் திணைக்களம் இடைநிறுத்தி உள்ள காணிகள் போன்றவை தொடர்பான பிரச்சனைகள் வட மாகாண ஆளுநர்,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,துறைசார் அலுவலர்கள் ஆகியோரால் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்டச்செயலத்தில் காலை 9.30 மணிக்கு வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்திஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன் ஆகியோர் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அலுவலர்கள் ஆகியோர் சமூகத்தில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் இராணுவத்தினர்  கையகப்படுத்தி  உள்ளகாணிகள் தொடர்பில் ஆராயப்பட்டபோதும் கேப்பாபிலவு பாடசாலைக்காணி உட்பட எந்தக்காணியையும் விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கவில்லை. இதனால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மிக முக்கிய காணிப்பிரச்சனைகளான மகாவலி தொடர்பானபிரச்சனைகள், தொல்பொருளியல் தொடர்பான பிரச்சனைகள், வனவளத்திணைக்கள காணிகள், வனஜீவராசிகள் தொடர்பான காணிகள் என்பவைதொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால்லந்துரையாடல் முடிவுறுத்தப்பட்டது.

No comments