செங்கம்பளமும் இல்லை: ஆட்டுக் கறியும் இல்லை!


வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் ஆட்டுக்கறியுடன் சாப்பாடென தமிழரசுக்கட்சி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் போதிய திட்டமிடல் இன்மையால் பலருக்கும் உணவு கிட்டாமையால் பட்டினியுடன் காத்திருக்கின்ற பரிதாபம் ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக அமைச்சர்கள்,உறுப்பினர்களுடன் வருகை தரும் அவர்களது ஆளணியினரே உணவின்றி நிர்க்கதியாகிருந்தனர்.

இதனிடையே இன்று (23) இடம்பெற்ற சபை அமர்வில் அவைத்தலைவரிற்கு செங்கம்பளம் விரிக்கப்படாமையால் சபை ஆரம்பிப்பதில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

சபையின் இறுதி அமர்வான இன்று (23) வழமையாக விவரிக்கப்படுகின்ற செங்கம்பளத்தை ஊழியர்கள் விரிக்கவில்லை.

இதனை சபை ஆரம்பிப்பதுக்கு சிறிது நேரம் முன்னதாக அறிந்து கொண்ட அவைத் தலைவர் உடனடியாக விரிக்குமாறு பணித்திருந்தார். இதற்கமைய கம்பளம் விவரிக்கப்பட்டு சபை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனிடையே நேற்றும் இன்றும் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சாரி சாரியாக படையெடுத்து சென்ற ஊழியர்கள் முதலமைச்சருடன் புகைப்படமெடுப்பதில் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர்.முதலமைச்சரும் அவர்களை வரவேற்று புகைப்படம் பிடிப்பதில் ஆர்வத்துடன் இணைந்திருந்தார்.

No comments