விக்கினேஸ்வரனைத் தாக்குவதற்கு வடக்கு அவை சதித்திட்டம் தீட்டியதா?


வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுறவுள்ள நிலையில் இன்று சபையின் இறுதி அமர்வு இடம்பெற்றது. சபையின் முழுநேர விவாதமும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வசைபாடுவதிலேயே இடம்பெற்று முடிந்த நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவரது பிறந்த தினமான இன்று அவதூறுக்கு உள்ளாக்கவேண்டும் எனும் குறுகிய நோக்கோடு திட்டமிட்டு இன்றய தினத்தை அமர்வு நாளாக அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவுசெய்தாரா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

கடந்த வருடம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று தாங்களும் ஆளுங்கட்சி என்பதையும் வடக்கு மாகாணசபையால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதையும் மறந்து இன்றைய அமர்வில் முதலமைச்சரை வசை பாடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினர்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான அணியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிரித்த முகத்துடன் ஆளுநரிடம் கையளித்திருந்த தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திட்டமிட்டே முதலமைச்சரின் பிறந்த தினமான இன்றைய தினத்தை இறுதி அமர்விற்கு தெரிவுசெய்திருந்தாரா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

இவர்களுக்கு மேலாக எதிர்கட்சித் தலைவர் தவராசாவும் முதலமைச்சர் மீது வசைபாடல்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments