கேள்வி கேட்டால் சிறை: தமிழரசு ஜனநாயகம்!

தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி தலைமையகத்தில் சுமந்திரனிடம் நியாயம் கேட்ட பொதுமகன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுமந்திரனின் மெய்பாதுகாப்பிலீடுபட்டுள்ள விசேட அதிரடிப்படை யாழ்.காவல்நிலையத்திற்கு அனுப்பிய தகவலையடுத்து மார்டின் வீதிக்கு வந்த காவல்துறையினர் அவரை கைது கொண்டு சென்றுள்ளனர்.

இதனிடையே தமிழரசுக்கட்சி விசுவாசிகள் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரென்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

அண்மையில் சுமந்திரன் சிறப்பு பேச்சாளராக யாழ்.நகரில் பங்குபற்றியிருந்த நிகழ்வொன்றிலும் குறித்த பொதுமகன் கேள்வியெழுப்பியிருந்ததாக தெரியவருகின்றது.எனினும் அன்றைய நிகழ்விலும் ஏற்பாட்டாளாகளால் கேள்வி எழுப்பிய குறித்த பொதுமகன் வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்று மார்டின் வீதி தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்று நடந்து கொண்டிருந்த போதே அங்கு பிரசன்னமாகியிருந்த குறித்த பொதுமகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்தே சுமந்திரனின் உத்தரவையடுத்து அதிரடிப்படையினரின் முறைப்பாட்டினையடுத்து அவர் கைதாகியிருந்தார்.

மார்டின் வீதி தமிழரசுக்கட்சி அலுவலகத்திலிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து ஒரு பொதுமகனை அத்துமீறி பிரவேசித்து குழப்பமேற்படுத்தியதாக கைது செய்திருந்ததாக யாழ்.காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

No comments