நெல்சன் மண்டேலாவும் அரசியல் கைதியே: சுமந்திரன்!

புலிகள் இனஅழிப்பில் ஈடுபட்டதாக குரல் எழுப்பி வந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகளை தற்போது நெல்சன் மண்டேலா அளவிற்கு வானுயுர புகழ தொடங்கியுள்ளார்.

அரசியல் கைதி என்பது தமது சொந்த நோக்கங்களிற்கு அப்பால் அரசியல் நோக்கங்களிற்காக ஓர் நாட்டின் சட்டதிட்டங்களிற்கு எதிராக செய்படும் நபரே ஆவார்.

ஆனால் அவரை அந்த அரசு பயங்கரவாதி என்றே கூறும். அமரர் நெல்சன் மண்டலோ அவர்களும் பயங்கர வாதியாக 28வருடங்கள் சிறையில் இருந்து பின்னாளில் இலங்கை உட்பட பல நாடுகளால் அரசியல் கைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரே.

இதேபோல் எமது உறவுகளும் பல அரசால் இவ்வாறே பயங்கரவாதியாக சித்தரிக்க பட்டாலும் 2009 ல் மௌனிக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கத்தில் செயற்பட்ட எவரையும் பயங்கர வாதியாக இன்று அரசு கூற முடியாது. அவர்களும் அரசியல் கைதிகளேயென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளமை தெரிந்ததே. 

No comments