மக்கள் போராட்டத்தில் - சம்பந்தன் சரஸ்வதி பூசையில் - சரவணபவன் சாராயக்கடையில்



அரசியல் கைதிகளின் விடுதலைகோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடைப்பயணமும் மக்கள் தங்கள் ஊர்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களும் மேற்கொண்டுவரும் நிலையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் நாடாளுமன்றில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் இஸ்ட தெய்வம் காளி ஆகும். அண்மையில்கூட அவர் திருகோணமலையிலுள்ள தனது குலதெய்வமான காளிகோவிலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைத்திருந்தார்.

நேற்று நவரத்திரி பூசை ஆரம்பமான நிலையில் நாடாளுமன்ற வாளாகத்தில் அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சரஸ்வதி பூசை நிகழ்வினை சம்பந்தன் நிகழ்த்தியுள்ளார்.

அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மக்களும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவை எவற்றிலும் பங்கேற்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவராத்திரி விழா நடத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தனிப்பட்ட வர்த்தக நலனுக்காக அமைச்சருக்கு மதுபான விருந்துவைத்துது மகிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments