அலரி மாளிகைக்காக மோதல்?


தனது பிரதமர் கதிரையினை காப்பாற்றிக்கொள்ள ரணில் வேகமாக நகர்வுகளை ஆரம்பித்துள்ளார்.இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்க, இங்கிலாந்து,ஐரோப்பிய யூனியன் ,இந்திய , ஜப்பான் ,கனடா  மற்றும் அவுஸ்திரேலிய ராஜதந்திரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து தற்போதைய அரசியல் நிலை பற்றி விளக்கியுள்ளார்.

இதனிடையே அலரி மாளிகையினை ஒப்படைக்க மைத்திரி –மஹிந்த அரசு கோரியுள்ளது. இன்று அலரி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லகஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி பிரதமரான ரணில் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments