அரசியல் கைதிகள் விவகாரம்:மீண்டும் பேச்சு!

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் கேள்வி எழுப்பவுள்ள எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்றாக ஜனாதிபதியுடன் உரையாடப்படுமெனவும் அவர் யாழில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தடுத்துவைகக்பபட்டுள்ள  107பேரில் 51பேர் தண்டனைத் தீர்ப்பு சொல்லப்பட்ட நிலையில் உள்ளமையினால் அவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி உடனடியாக மன்னிப்பு வழங்க முடியும். அதனை வழங்க வேண்டும் என்றே அவருடனான சந்திப்பில் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைகளில் 107பேர் அரசியல் கைதிகளாக இன்றும் உள்ளனர் இவர்களில் 51 பேரின் விடுதலைக்கான பொறுப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. இதற்காக ஜனாதிபதியுடன் விசேடமாக பேசவுள்ளோம். இவர்களின் கோவைகளை தனித்தனியாக ஆராய்ந்து சிறு விடயம் பெரிய விடயம் என வகைப்படுத்தி ஆய்வு செய்து பார்த்து இன்னமும் காலம் தாழ்த்த முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த சந்திப்பின்போதே பிரதமர் நீதியமைச்சரிடம் உறுதியாக தெரிவித்தார்.

 இதனால் 51 பேரையும் மன்னிப்பின் அடிப்படையில் உடன்னியாக விடுவிக்க வேண்டும். எனக் கோருவோம் இரு நாட்களில் அந்தச் சந்திப்பு இடம்பெறாது விடின் 3ம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் எழுப்பவுள்ள முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்றாக ஜனாதிபதியுடன் உரையாடப்படும்.

இதேநேரம் எஞ்சிய அரசியல் கைதிகளில் 2013ம் ஆண்டிற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சிலருக்கு இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை. அதேபோல் எஞ்சிய வழக்கு இடம்பெறும் கைதிகளிற்கு நீண்டகாலமாக வழக்கு தீர்வின்றித் தொடர்கின்றது. இதில் 15 வருடமாக வழக்கு இடம்பெறுபவர்களும் உள்ளனர். இவைகளிற்கான தீர்விற்காகவே பிரதமர் தலமையில் நீதி அமைச்சர் , சட்டமா அதிபர் ஆகியோரை சந்தித்தோம் மீண்டும் செவ்வாய் கிழமை இடம்பெறும் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென்றார்.

No comments