செவ்வாயன்று நாடாளுமன்றில் முக்கிய சட்டவரைபுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, கொண்டு வரப்படும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின், வரைவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அதேவேளை, 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான, நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவை, நாளை மறுநாள்,  நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

No comments