யாழில் சர்வமத கூட்ட ஆய்வு!


சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமாதானப் பேரவையின் செயற்பாட்டிற்கு நிதியுதவி செய்கின்ற ஜேர்மன் நாட்டின் மிசேறியோர் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வடமாகாணசபை அமைச்சர் அனந்தி,உறுப்பினர் கஜதீபன் போன்றவர்கள் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

No comments