கொள்ளையர்கள் விபரங்கேட்கும் தவநாதன்?


திருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பிலான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அதன் பின்னர் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று வந்து விட்டது. அவ்வாறு ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தக் காட்சியே தற்போதும் தொடருகின்றது.


இந்தச் சபையில் உட்கட்சி முரண்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்படுகின்றன. அதற்கே இங்கு முன்னுரிமையும் கொடுக்கப்படுகின்றது. இவ்வளவு காலமும் அந்த உட்கட்சி விடயங்கள் தொடர்பில் பேசி வந்திருக்கின்ற போதிலும் இறுதி நேரங்களிலும் அந்த விடயங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இப்போதும் அதைப் பற்றிப் பேசி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள் என்று கேட்டார்.இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது திருடர்களின் குகை போன்று தான் இச் சபை இருப்பதாக நினைக்கின்றேன். 


சபையில் யார் யார் கொள்ளையடிக்கின்றார்கள் என்பது வெளியே வர வேண்டும். அதில் எல்லோரும் என்பதை என்பi ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே நாங்கள் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்திருந்தார். அதே போன்று ஆளுங்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி எங்களை நாங்கள் நியாயப்படுத்த வேண்டுமென்பதால் குற்றவாளிகள் யாராயினும் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம். குறிப்பாக சபையின் எதிர்க்கட்சியினராகிய நீங்கள் செய்ய வேண்டிதையே நாங்கள் செய்திருக்கின்றோம் என்றார் 

No comments