அடிக்கின்றது அதிஸ்டம்: குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு!


வடமாகாணசபை உறுப்பினர்களிற்கு காசு மேலே காசு வந்து கொட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது போனஸாக அவர்களின் குடும்பத்தவர்களிற்கு வடமாகாணசபையில் அரச வேலை வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.

வடமாகாண முதலமைச்சர்,அவைத்தலைவர்,பிரதி அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென முதலமைச்சரால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையின் முதலாவது அவையின் இறுதி அமர்வு  கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இப்பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் பொங்கியெழுந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது முகாமைத்துவ உதவியாளர்கள் , அலுவலக உதவியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்பதையும் இணைத்து தீர்மானப்போடவேண்டுமென குரல் எழுப்பியிருந்தனர்.

இறுதியில் அவர்களது கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து தீர்மானம் அனைத்து உறுப்பினர்களதும் முகாமைத்துவ உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் தமது மனைவியர்,தந்தையர்,சகோதர சகோதரிகளிற்கு இத்தகைய நியமனத்தை வழங்கி அவர்களது வருமானத்தை சுருட்டிவருவகின்றமை ஊடகங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக வடமாகாண உறுப்பினர் சுகிர்தன் மனைவி,தந்தை மற்றும் சகோதரனிற்கு நியமனம் வழங்கியுள்ளார்.அமைச்சர் அனந்தியோ மகளிற்கும் என பலரும் அவ்வாறே குடும்பத்தவர்களிற்கு நியமனம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அனைவரிற்கும் தற்போது வடமாகாணசபையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.எனினும் 60 வயது கடந்த முதியவவர்களிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமாவென்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments