பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் - மனித உரிமைககள் காப்பகம்!

இலங்கையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (Counter Terrorism Act ), பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் முன்னேற்றமானது என்று தெரிவித்துள்ள மனித உரிமைகள் காப்பகம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சர்வதேச மனித உரிமைகளுக்கு ஏற்ப திருத்தப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் காப்பகம் விமர்ச்சனமொன்றை வெளியிட்டு, அது தொடர்பில், நேற்று (22) அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டவரைபு, பங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் முன்னேற்றமானது. ஆயினும், உரிமைகள் மீறல்களுக்கு எதிரான பாதுகாப்புகளில் மேலும் பாதுகாப்புகளைக் கொண்டதாக வேண்டும்.

சர்வதேச மனித உரிமைக்களுக்கேற்ப இலங்கை நாடாளுமன்றம், இந்தச் சட்ட மூலத்தை திருத்த வேண்டும். மேலும், அது சீர்திருத்தங்களை குறைக்கும்படியான அழுத்தங்களுக்கு எதிராக உறுதியாக வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வரையப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2018, “பயங்கரவாதம்” என்பதன் வரைவிலக்கணத்தை ஒடுங்கச் செய்து, சித்திரவதைக்கும் வலுக்கட்டாயமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்களுக்கும் எதிராக பாதுகாப்புகளைக் கூறியுள்ளது.

மேலும், இந்தப் புதிய சட்டமூலம் விசாரணைக்கு முந்திய தடுப்புக் காலத்தையும் குறைக்கின்றது. ஆயினும், சில ஏற்பாடுகள் அமைதியான எதிர்ப்புகளையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் தடை செய்யப் பயன்படுத்தப்படலாம். பொலிஸ் அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகள் இன்னும் போதாது உள்ளது.

“இலங்கை அரசாங்கம், சித்திரவதையில், கெட்ட பெயர் பெற்றிருந்த பயங்கரவாதத் தடை சட்ட பிரச்சினைகளைத் தீர்த்துள்ளது. ஆயினும், முன்மொழியப்பட்ட சட்டம் கூடுதல் பலமான மனித உரிமை பாதுகாப்புகளை வேண்டி நிற்கின்றது” என மனித உரிமை காப்பக பயங்கரவாதம் தொடர்பாக ஆய்வாளர் லெற்றா ரெய்லர் கூறினார். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கூறிய சட்டவிதிகள் - சட்டத்தின் ஆட்சியை குழப்ப முயல்வதை நாடாளுமன்றம் மறுதலிக்க வேண்டும்.''

நாடாளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் சட்டவரைபை ஒக்டோபர் 9, 2018 இல் சமர்பித்தனர். இந்தச் சட்டமூலத்தின் உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைக்க வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கவனத்தில் உள்ள ஏற்பாடுகள், பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள பொலிஸுக்கு கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கப்படுவதை வலியுறுத்துகின்றன.

அரசாங்கத்தில் பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையாக தற்போதைய சட்டத்தை நீக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அரச பாதுகாப்புப் படைகள் பல கடுமையான மனித உரிமை மீறல்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் செய்துள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் 1979ஆம் அவசர ஏற்படாக இயக்கப்பட்டு 1982ஆம் ஆண்டில் நிரந்தரமாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை.
நாடாளுமன்ற சர்வதேச நியமங்களுடன் ஒத்துப்போகும் சட்ட மூலத்தையே கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டமும் இரண்டு வருடங்களில் தானாக செயலிழக்க வேண்டும். அதன்பின் மதிப்பிட்டின் பின் இதை புதுப்பிக்கலாம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் இன் கீழ் நடைபெறும் விசாரணைகளை சட்ட மா அதிபர், மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயங்கரவாத சந்தேக நபர்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்படும் அரச ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 'நீண்ட கால இழுத்தடிப்பின் பின்னர் இலங்கை இறுதியான அதன் கெட்ட பெயர் சம்பாதித்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐ கைவிடவுள்ளதாக தெரிவிகின்றது' என ரெய்லர் கூறினர்.

No comments