மைத்திரியை எப்படி நம்புவது : மகிந்தவின் கணக்கு


“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி இடைக்கால அரசை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது. முதலில் அவர் இறங்கி வரட்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இருந்து பிரித்து அவர் வெளியே வரட்டும். அப்போது மேலே பேசலாம்.”

– இப்படி தீர்மானமொன்றை எடுத்துள்ளது பொது எதிரணி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது…

இந்தக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட பலர் இடைக்கால அரசை ஏற்படுத்தும் யோசனைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்…

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டு வெளியில் வந்து பேசினால் அடுத்த கட்டம் பற்றி பேசலாம். அதற்கு முன்னர் எதையும் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. சுதந்திரக் கட்சி வெளியே வராமல் மைத்திரி நகர்த்தும் அரசியல் நகர்வுகளை நம்பக் கூடாது. எனவே, அவர்கள் முடிவு எடுக்கும்வரை காத்திருப்போம்” என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி எம் பிக்களான முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்..

எதிர்வரும் 16ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இடைக்கால அரசை தீர்மானிக்கும்.

No comments