நல்லூர் காணிவேண்டுமாம்: கொடிபிடிக்கும் மதகுழுக்கள்!


நல்லூர் ஆலயமிருந்து இடித்தழிக்கப்பட்ட பின்னர் தேவாலயம் நிறுவப்பட்ட காணியினை மீளக்கோருவதன் மூலம் அங்கு உருவாக்கப்படும் தொல்லிய் வரலாற்று மையத்தை முடக்க சதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு,கல்வி திணைக்களம் என்பவை இயங்கும் நிலம் தமக்குரித்தானதெனவும் அதனை மீள ஒப்படைக்குமாறு இலங்கை திருச்சபை புறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் ,யாழ்.கல்வி திணைக்களம் மற்றும் சாதன பாடசாலை உள்ளிட்ட வளாகம் இலங்கை திருச்சபைக்கு சொந்தமான காணியென தெரிவித்தே உரிமை கோர முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த காணில் முதலில் பாடசாலைத் தேவைக்காக 1960ம் ஆண்டு ஒரு பகுதி காணி வழங்கப்பட்டிருந்தது.அதன் பின்னர் வலயக்கல்வி திணைக்களம்,கல்வி அமைச்சு , சாதனா பாடசாலை என்பவை இயங்கிவருகின்றன.

தமது சபைக்குரிய காணியை மீளவும் ஒப்படைக்க வேண்டும் என குறித்த சபையின் ஆயர் லியோராஜ் கனகசபை மத்திய கல்வி அமைச்சரிடம் போரிக்கையாக முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மாணவர்களின் வரவு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சாதன பாடசாலை மூடப்படும் அபாயம் அமைந்துள்ளது.

இதனையடுத்து வடமாகாண கல்வி அமைச்சு அங்கு தொல்லியல் சின்னங்களை பேணும் மையமொன்றை முதலமைச்சரினை கொண்டு கடந்த வாரம் திறந்திருந்தது.

இந்நிலையிலேயே காணியை காப்பாற்றப்போவதாக தெரிவித்து கும்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

குறித்த வளவிலேயே யமுனா ஏரி,நல்லூர் ஆலயம் என்பவை அமைந்திருந்ததும் அந்நியர் படையெடுப்புடன் நல்லூர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு தேவாலயம் கட்டப்பட்டதும் தெரிந்ததே.

No comments