ஆக்கிரமிப்பில்லையென்ற சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி?

முல்லைதீவில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறவில்லையென வாதிட்டு வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்பட்டு தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவது தொடர்பில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளை இலங்கை ஐனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்தின் போதே ஆவணங்களை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது   இடம்பெறவுள்ளது.  முல்லைதீவு மாவடத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம். முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம்” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைதீவு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போரடிய போது அவ்வாறு ஆக்கிரமிப்பு நடைபெறவில்லையென அரசிற்கு வக்காலத்து வாங்கிய சுமந்திரன் தற்போது அந்தர்பல்டியத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments