முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியில்லை: ஆளுநரோ நிதி கேட்கிறார்?


யுத்த அவலங்களினூடு வாழும் வடமாகாண தமிழ் மக்களிற்கு உதவ முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் நிதியத்தை ஜந்து வருடங்கள் கடந்தும் அனுமதித்திராக இலங்கை அரசு தனது முகவராக ஆளுநரை புலம்பெயர் தமிழர்களிம் அனுப்பியிருக்கின்றது.

எனினும் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட அதிகாரிகள் லண்டன் சென்றடைந்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அழைப்பின் பேரில் கடந்த நான்காம் திகதி லண்டன் சென்ற ஆளுநர் சனியன்று மேற்கு லண்டனில் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் 15பேர் வரையில் பங்கெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டார். 
வட மாகாண சபையின் செயற்பாடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தும் காணிகள் விடுவிப்பு யாழ்குடா நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர் உங்கள் மகளுக்கு உங்கள் கிராமத்திற்கு உங்கள் ஊருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் உங்கள் கிராமங்களில் ஒரு சிறிய தொழிற்சாலைகள் ஏதேனும் உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள் துன்பப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு டொலர் வீதமாவது பங்களிப்பு செய்யுங்கள் நான் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிட போவதில்லை ஆனால் இடதுசாரி கொள்கையுடன் எனது பயணம் ஆரம்பமாகியது அதனால் மக்களுக்கு எனது காலத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று இருக்கின்றேன் அதற்கு அரசாங்கத்தால் மட்டும் முடியாது உங்களைப் போன்று புலம்பெயர் மக்களின் ஆலோசனையும் உதவியும் தேவையாக இருக்கின்றது அதற்காகவே இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்னால் முடிந்த அனைத்தையும் உங்களுக்கு செய்யத் தயாராக இருக்கின்றேன் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்னை பயன்படுத்தி உங்கள் மக்களுக்கு எனது சகோதர மக்களுக்கு நீங்களே நேரடியாக சென்று உதவி செய்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்கின்றேன் அதற்காக எனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் உங்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

இதே நோக்கத்துடன் வடக்கு முதலமைச்சர் உருவாக்க முற்பட்ட முதலமைச்சர் நிதியம் இன்று வரை அரசினால் அனுமதிக்கப்படாதேயுள்ளது.

இந்நிலையில் வடமாகாணசபையின் ஆயட்காலம் எதிர்வரும் 25ம் திகதியுடன் முடிவுக்குவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments