விஜயகலா மகேஸ்வரன் கைது!


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டிருந்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இந்த உரைத்தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஜயகலா எம்.பியை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments