ஒதியமலை தூபிக்கு தடை?


முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைபுற கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப்பகுதியில் 1984 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 02 ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்க பிரதேச மக்கள் எடுத்த முயற்சியிக்கு ஒட்டுசுட்டான் காவல்துறை தடை விதித்துள்ளார்கள்.
ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக அந்த இடத்தில் நினைவுத்தூபி அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்று கிராம அமைப்புக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒட்டுசுட்டான் காவல்துறை சென்று அதற்கு தடை வித்துள்ளார்கள்
இது தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் நினைவுத்தூபி அமைப்பதற்கான சகல அனுமதிகளையும் காவல்துறை நிலையத்திற்கு காட்டிவிட்டு நினைவுத்தூபி அமைக்கலாம் என்று பொது அமைப்புக்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments