மஹிந்தவுடன் முப்படை தளபதிகள்!


மஹிந்தவை பிரதமராக கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லையென சுமந்திரன் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளை இலங்கையின் முப்படை தளபதிகளும்,காவல்துறை அதிபரும் மஹிந்தவை சந்தித்துள்ளனர்.  

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பிரதமராக அல்லாது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் மகிந்தவை சந்தித்தார். பிரதமர் அலுவலத்தில் பிரதமராக மகிந்தவை சந்திக்க முடியாது சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம் என்ற கோரிக்கையின் பிரகாரம் மகிந்தவின் இல்லத்திலேதான் சந்திப்பு நடந்ததென சுமந்திரன் வியாக்கியானம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் முப்படைகளது தளபதிகள்,காவல்துறை அதிபர் ஆகியோருடன் மஹிந்த அவசர சந்திப்பினை இன்று நடத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த தனக்கான பாதுகாப்பிற்கு கடற்படை விசேட அதிரடிப்படையை அமர்த்தியுள்ளார்.அத்துடன் ரணிலிற்கு வழங்கப்பட்ட 1008 பேர் கொண்ட காவல்துறை பிரிவு பெறப்பட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்று 10 காவல்துறையினர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளனர்.

No comments