வரவுசெலவு திட்டத்திற்கு கூட்டமைப்பு இம்முறையும் ஆதரவா?


பௌத்த கோயில்கள் கட்டுவதையும் ,சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதனையும் தான் இலங்கையின் முப்படைகளும் தற்போது வடக்கிழக்கில் தொழிலாக கொண்டுள்ளன.இந்நிலையில் முப்படைகளிற்கு எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 30ஆயிரம் கோடியினை இந்த அரசு ஒதுக்கவுள்ளது.நடப்பாண்டில் 29ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.தற்போது மேலும் ஆயிரம் கோடி ஒதுக்கப்படவுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் யுத்தம் முடிவடைந்து 9வருடங்கள் கடந்துவிட்டது.புத்தருக்கு கோவில் கட்டுவதும் வெசாக் கொண்டாடுவதும் தான் அவர்களிற்குள்ள வேலை.தம்மால் நடத்தப்படுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளிற்கு சம்பளம் வழங்குவதையும் படைகளே செய்கின்றன.

வடக்கில் 15 டிவிசன் படைப்பிரிவுகள் தற்போது வரையுள்ளன.

தமிழ் மக்களிற்கு  அற்பசொற்ப சலுகைகளை வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் தம்முடன் தான் இருப்பதாக இன்னொருபுறம் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கின்றார்கள்.

வடக்கில் 230 பௌத்த விகாரைகளை படைத்தரப்பு கட்டிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு படைகளிற்கென நிதி அள்ளி வழங்கப்படுகின்ற வரவு செலவு திட்டத்தை இம்முறையும் கூட்டமைப்பு ஆதரிக்கப்போகின்றதா இல்லையாவென்பதனை மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதிலும் சம்பந்தன்,மற்றும் சுமந்திரனை விடுத்தாலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது நிலைப்பாட்டை மக்களிடையே தெளிவுபடுத்தவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

No comments