சீனாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது சிறிலங்கா !


சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக தாம் அடுத்த மாதம், சீனாவின் வணிக அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷங்காய் நகரில் அடுத்த மாதம், அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாகவும்,  அதில் பங்கேற்கச் செல்லும் போது, சீனாவின் வணிக அமைச்சரவைச் சந்திக்கவிருப்பதாகவும், மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.

”சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பாக சிறிலங்கா இப்போது, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. பங்களாதேசுடனான சுதந்திர வணிக உடன்பாடு குறித்த கூட்டு சாத்திய ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments